சசிகலா எனும் குற்றவாளிக்கு வழிநெடுக வரவேற்பா..? நேர்மைக்கு மரியாதையே கிடையாதா..?

கொள்ளை அடித்து, அது நிரூபணமாகி, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையையும் கட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட குற்றவாளி ஒருவர் இன்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.


ஊர்ப் பணத்தை திருடியவர்களை கண்டாலே முகத்தை திருப்பிக்கொள்வதுதான் பொதுவான மக்கள் குணம். ஆனால், இன்று சசிகலாவுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு அத்தனை நேர்மையாளர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

எத்தனை கொள்ளை அடித்தாலும், ஊழல் செய்தாலும் தவறு இல்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டதைத்தான் இந்த வரவேற்பு காட்டுவதாகத் தெரிவிக்கிறார்கள். தமிழர்களின் ரத்தத்தில் ஊழல் கலந்துவிட்டதாகவே மற்றவர்கள் இதனை பார்க்கும்போது நினைப்பார்கள்.

இத்தனைக்கும் அவர், பொதுச்சொத்தை இனிமேல் கொள்ளை அடிக்க மாட்டேன் என்றோ அல்லது இனி நான் திருந்தி வாழ்வேன் என்றோ கூறினாரா என்றால் அதுவும் இல்லை. அதாவது, வாய்ப்பு கிடைத்தால் மேலும் திருடுவார் என்பதுதான் அர்த்தம். 

தமிழன் என்று தலைநிமர்ந்து யாரும் சொல்லவே முடியாது என்பதையே காட்டுகிறது, சசிகலாவுக்கான வரவேற்பு.