தனிமையில் இனிமை கண்டு கொண்டிருந்த காதல் ஜோடி..! அடித்து கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசிய கும்பல்! திருச்சி திகுதிகு!

காதல் ஜோடியை அடித்த கஞ்சா கும்பல், காதலனை ஆற்றில் வீசிய சம்பவமானது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஜீவித் என்ற கல்லூரி மாணவர் வசித்து வந்தார். இவருக்கு அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையை ஒரு ஜோடியானது சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் அடியில் உரையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மர்ம கும்பல் கஞ்சா புகைத்து கொண்டும், முந்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். காதல் ஜோடியை பார்த்தவுடன் அவர்கள் அருகே சென்று அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களை சில நிமிடங்களுக்கு தடுத்த ஜீவித், தன் காதலியை ஓடி விடுமாறு கூறியுள்ளார். அந்த மாணவி சாமர்த்தியமாக அங்கிருந்து ஓடிவிட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் ஜீவித்தை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் ஜீவித்தை கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். ஆற்றில் 14 ஆயிரம் கன அடி வேகத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்ததால் ஜீவித் அடித்து செல்லப்பட்டார்.

இதனிடையே மாணவி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருவதை பார்த்த மாட்டு வண்டியில் வந்த 2 பேர் அவருக்கு உதவ முன் வந்தனர். அவர்கள் போதையில் இருந்த மர்ம கும்பலை சேர்ந்த 2 பேரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவிமங்கலத்தை சேர்ந்த கலையரசன்,  மணக்காடு பகுதியை சேர்ந்த கோகுல் என்பது தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட கூட்டாளிகளை குறித்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை மீட்பதற்காக, செய்யுங்கள் தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர் படகுகளின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாலை நேரமானதால் வெளிச்சம் இல்லாததாலும், போதிய கருவிகள் இல்லாததாலும் மீட்பு பணியை தற்காலிகமாக தள்ளி வைத்தனர். இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவமானது கொள்ளிடம் ஆற்றங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.