எந்த வயதில் திருமணம் செய்தால் யோகம் கிடைக்கும்? உங்க ராசிக்கான வயதை தெரிஞ்சுக்கோங்க!

ஒருவருடைய ராசியை வைத்து அவர்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என்பதையும், எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.


மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் சீக்கிரமாக யோசித்து முடிவு செய்வார்கள். இவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் அல்லது முப்பது வயதுக்குள்ளும் திருமணம் நடக்கும்.

ரிஷப ராசி : ரிஷப ராசிக்காரர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். வயது என்பது இவர்களுக்கு ஒரு எண் மட்டுமே.

மிதுன ராசி : மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் அதிக சிரமப்படுவார்கள். ஆனால், இவர்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.

கடக ராசி : கடக ராசிக்காரர்கள் நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பார்கள். காதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமணம் யோகம் வந்துவிடும்.

சிம்ம ராசி : சிம்ம ராசிக்காரர்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதிற்கு முன் திருமணம் நடக்கும்.

கன்னி ராசி : கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவார்கள். ஆனால், இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைக்கும்.

துலாம் ராசி : துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.

விருச்சக ராசி :விருச்சக ராசிக்காரர்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். அதனால் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை எளிதில் கிடைத்துவிடும்.

தனுசு ராசி : தனுசு ராசிக்காரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்கள் அனைத்தும் பிடிக்காத ஒன்று. ஆனால், இவர்களுக்கு 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.

மகர ராசி : மகர ராசிக்காரர்கள் தங்களின் கடமையில் கவனமாக இருப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.

கும்ப ராசி : கும்ப ராசிக்காரர்கள் தனக்கென்ற தனிமையான சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால், இவர்கள் துணையை தேடுவதில் அவசரப்படக் கூடாது. இவர்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கும்.

மீன ராசி : மீன ராசிக்காரர்கள் காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும்.