குழந்தைக்கு தந்தையான திருநங்கை..! மனைவிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி! மனதை உருக வைக்கும் நிகழ்வு!

அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவமானது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் வர்ஜீனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு செத் மார்லெவ். இவருடைய வயது 41. இவர் பிறக்கும்போது ஆணாக பிறந்திருப்பினும், உடலில் ஏற்பட்ட மாற்றங்களினால் 2003-ஆம் ஆண்டில் திருநங்கையாக மாறினார். இதனிடையே இவர் லியா என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை பெற்றுள்ளனர். ஆனால் மார்லெவ்வால் அது இயற்கையாக இயலாது என்பதை உணர்ந்தனர். அதன் பின்னர், நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக இருவரும் முயற்சி செய்துள்ளனர். 

மருத்துவர்களின் அறிவுரைப்படி மார்லெவ் தன்னுடைய கருமுட்டையை, தானம் செய்த ஒருவரின் உயிரணுக்களுடன் சேர்த்துக்கொண்டார். அதனை இந்தியா தன்னுடைய கருவில் சுமந்து வந்தார். 2015-ஆம் ஆண்டில் இருவருக்கும் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆர்லோ என்று பெயர் வைத்தனர். தற்போது குழந்தைக்கு ஐந்து வயதாகிறது.

இதுகுறித்து மார்லெவ் கூறுகையில், "எங்களுக்கு குழந்தை பிறந்தது மிகவும் அதிசயமாகும். இறைவனின் அருளினால் மிகவும் அழகான குழந்தை பிறந்துள்ளது. எனக்கு குறைபாடு இருந்ததாக என்றைக்கும் என் மனைவி என்னை உணர வைத்ததில்லை" என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.