முதன்முறையாக கமல்ஹாசனுடன் விவேக்... அடடா நெகிழ்ச்சி

காமெடி நடிகர் விவேக், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


நடிகர் விவேக் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கடந்த 1987ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகமானார். 

இதற்குப் பின் நடிகர் விவேக் பல ஆண்டு காலமாக காமெடியில் கலக்கி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர் பல முன்னணி நடிகர்களான ரஜினி ,அஜித் , விஜய் , சத்யராஜ் ,சூர்யா ,அர்ஜுன் , விக்ரம், தனுஷ் ,சிம்பு  போன்ற அனைவருடனும் நடித்துள்ளார் .

ஆனால் இவர் இதுவரை உலக நாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றது இல்லை என்று பல இடங்களில் அதனைப்பற்றி  வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதற்கான சரியான சந்தர்ப்பம் அமையவில்லை என்றும் கூறியிருக்கிறார் காமெடி நடிகர் விவேக்.

தற்போது நடிகர் விவேக்கின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது அதாவது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விவேக்.

இந்த செய்தியை கேட்ட விவேக் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நடிகர் விவேக் இந்தியன்2 திரைப்படத்தில் இடம் பெறப் போகிறார் என்னும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து  வருகிறது.