தூக்குதுரையின் அடாவடி ஆரம்பம்

எந்த வித முன்னறிவிப்புமின்றி கடந்த ஞாயிறு இரவு விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு எதிர்பாராத விருந்தாக அமைந்தது.விஸ்வாசம் மோஷன் போஸ்டரானது வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 37 லட்சம் பார்வையாளர்களையும்  3.73 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 48 லட்சம் பார்வையாளர்களால் இந்த மோஷன் போஸ்டர் ஆனது கண்டுகளிக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . வேறு எந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு பார்வையாளர்களின் எண்ணிக்கையை பெறவில்லை.

 மேலும் விஸ்வாசம் திரைப்படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட , சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.