வருங்கால மனைவியுடன் மேல் ஆடை இல்லாமல் வெறி கொண்ட ஆட்டம்..! நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட வீடியோ உள்ளே!

காதலியுடன் மேலாடையின்றி நடிகர் விஷ்ணு விஷால் பேட்மின்டன் விளையாடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ஜீவா, வெண்ணிலா கபடிக்குழு ஆகிய திரைப்படங்களின் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு அவர் வாழ்க்கை தடம் மாறிப்போனது. தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த நிலைக்கு தள்ளப்பட்டார். 

மனைவியை பிரிந்த பிறகு மதுபோதைக்கு அடிமையானார். அதன் பின்னர் ஒரு வழியாக உடற்பயிற்சியின் மூலம் உடலை மீண்டும் கட்டுக்கோப்புக்கு கொண்டுவந்தார்.

சமீபகாலமாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும், இவரும் காதலித்து வந்தனர். இருவரும் பேட்மிண்டன் விளையாடிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில் விஷ்ணு மேலாடையின்றி, வெறும் உடம்புடன் பேட்மின்டன் விளையாடுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் விஷ்ணுவை பங்கமாக கலாய்த்துள்ளனர். மேலும், "ஜுவாலா கட்டா தான் உங்கள் படத்தில் ரம்யா வா" என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.