அப்பாவுக்காக கோவிலுக்கு சென்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் செய்த செயல்! நெகிழ வைக்கும் சம்பவம்!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகனான பிரபாகரன் தந்தையின் உடல்நலத்திற்காக தேரிழுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றார். முதல் முறை சிகிச்சையிலும் அவருடைய உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வாய்பேச முடியாமல் வேனில் பிரச்சாரம் செய்தார். 

இந்நிலையில் அவருடைய உடல்நலம் முன்னேற்றம் அடைவதற்காக, மகனான பிரபாகரன் தங்கத்தேர் இழுத்து வேண்டுதல் செய்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்தார். இதில் பல்வேறு தேமுதிக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் மீண்டும் எழுந்து வந்து பேசி விட மாட்டாரா என்று தேமுதிக நிர்வாகிகள் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பிரபாகரனின் வேண்டுதல் அழகு அவர்களை மனம் குளிர செய்துள்ளது.