தெய்வங்கள் குளிப்பதை (அபிஷேகம்) மட்டும் காட்டுறிங்க? உடை மாற்றுவதையும் காட்டலாமுள்ள..! இந்துக்களை நோகடித்த விஜய் சேதுபதி!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரானார். நடிகர் விஜய் சேதுபதி அவ்வப்போது  சர்ச்சையான கருத்துக்களை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார். கோயிலுள்ள சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். ஆனால் அபிஷேகம் செய்து முடிந்தபின் திரை மூலம் சாமி சிலைகள் மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த சிறுமி ஒருவர் தன் தாத்தாவிடம் எதற்காக சாமிகளை அபிஷேகம் செய்யும்போது காண்பிக்கிறார்கள்.துணி மாற்றம் செய்யும்போது மூடப்படுகிறது என்று சந்தேகமாக கேள்வி கேட்டதாகவும், அதற்கு அந்த சிறுமியின் தாத்தா சாமி குளிக்கும்போது காட்டுவார்கள் உடைமாற்றும் போது மூடப்படும் என்றும் கூறினார்.

அதற்கு அந்த சிறுமி இந்து கடவுள் குளிக்கும்போது காண்பிப்பது போல உடை மாற்றுவதையும் காண்பிக்கலாமே என்று கிண்டல் செய்யும் விதத்தில் பேசியுள்ளார். விஜய் சேதுபதி இந்த சம்பவத்தைப் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.