ஏழை மாணவர்கள் படிப்பதற்காக விஜய் கட்டிவரும் பள்ளிக்கூடம் இதுதான்..! வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை கட்டி வருகிறார் .


நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய  ரசிகர் மன்றம் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் . அந்த வகையில் எளிய மக்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சென்னை OMR பகுதியில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டி வருகிறார் .

அந்த அந்த பள்ளிக் கட்டிடத்தின் முடிவு பணிகளை பார்வையிட நடிகர் விஜய் நேரடியாக அங்கு சென்றிருந்தார். பள்ளி கட்டிடங்களை  அவர் பார்வையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த பல்வேறு திரைத்துறையினரும் ரசிகர்களும் நடிகர் விஜய்யின் இந்த நல்ல செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .