திமுக கூட்டணியில் அதிரடியாக இணைந்த புதிய கட்சி! உற்சாகத்தில் வடமாவட்ட நிர்வாகிகள்!

திமுக கூட்டணியில் வட மாவட்டங்களில் பாமகவிற்கு அடுத்தபடியாக பலமான கட்சியாக கருதப்படும் கட்சி இணைந்துள்ளது-


சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். பின்னர் திமுக கூட்டணியை தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தலில் ஆதரிக்க உள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் வேல்முருகன் இருந்தார். பின்னர் தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனை தொடர்ந்து இன்று ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைவதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதால் பிரச்சாரம் மட்டும் செய்ய வேல்முருகன் ஒப்புக் கொண்டுள்ளார்.