தேங்கிக்கிடந்த மழை நீர்! சடன் பிரேக் போட்ட லாரி! அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்! கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட கோரம்!

திடீரென்று மிகுதியான அளவில் மழை பெய்த காரணத்தினால் திண்டுக்கல்லில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.


நேற்றிரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. கரூரில் மழை வழக்கத்திற்கும் அதிகமாக பெய்துள்ளது. கரூர்-வேடசந்தூர் நெடுஞ்சாலை பகுதிகளில் மழை அதிக அளவில் பெய்துள்ளது.

ஏற்கனவே இந்த நெடுஞ்சாலை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. சாலைகள் ஏற்றம் இறக்கமாக இருப்பதால் மழை காலங்களில் வாகன விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. 

இன்று அதிகாலையில் சரக்கு லாரியும் எஸ்.ஆர்.எம் பேருந்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தன. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டுநர் எவருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. 

வாகனங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெய்னர் லாரி மீது எஸ்.டி.சி.எஸ் குரியர் லாரி பலமாக மோதியது. கொரியர் லாரியின் முன் பக்கம் உருக்குலைந்து போனதில் லாரியை ஓட்டி வந்த சின்னசாமி என்பவர் உயிரிழந்தார். சின்னசாமியுடன் சென்றிருந்த முருகன் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு வாகனங்களும் திடீரென்று பிரேக் அடித்ததால் சாலையில் வழுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது வேடச்சந்தூர் நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.