இந்திய ராணுவ வீரர்களுக்கு கை விரல்களால் ஆபாச சைகை! பாக்., நடிகையின் அசிங்கம் பிடித்த செயல்!

இந்திய ராணுவ துறையை அசிங்கப் படுத்துவதற்காக தன்னுடைய ஆபாச விரலை காட்டிய பாகிஸ்தானை சேர்ந்த நடிகைக்கு சமூகவலைதளங்கள் மூலம் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


நம்முடைய இந்திய நாட்டு எல்லையில் நம்முடைய ராணுவ வீரர்கள் , காஷ்மீருக்குள் ஊடுருவி நம்முடைய நாட்டிற்கு எதிராக நாசவேலை செய்ய இருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஏழு தனிப்படை அதிகாரிகள்  சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்திய நடிகை வீணா மாலிக் இந்திய ராணுவ வீரர்களின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்பதை தெரிவிக்கும் வகையில் தன்னுடைய ஆபாச விரலை காட்டும் விதமாக புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை வீணா மாலிக் ஹிந்தி மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமானார். இந்தப் புகைப்படத்தின் மூலம் வீணாமாலிக் நம்முடைய இந்திய ராணுவ வீரர்களை இழிவுபடுத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வீணா மாலிக்கை மிகுந்த கோபத்துடன் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தியாவிற்கு எதிராக இத்தகைய செயலில் ஈடுபட்ட நீங்கள் மீண்டும் இந்திய சினிமாவில் நடிக்க கூடாது எனவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர் . தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .