எண்ணெய் கடத்திவிட்டு அதிவேகமாக பறந்த வேன்! எதிரே வந்த பஸ்! நொடியில் நேர்ந்த கோரம்! 15 பேர் பலியான பரிதாபம்!

வேன் மீது பேருந்து மோதியதில் பயணிகள் கருகி உயிரிழந்த சம்பவமானது பாகிஸ்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமையன்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜாப் என்னும் மாவட்டத்திற்கருகே கான் மெஹ்தர்சாய் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் ஈரான் நாட்டிலிருந்து கடத்தப்பட்டு வந்த எண்ணெய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அப்போது எதிரே வந்து கொண்டிருந்த பேருந்து மீது வான் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் எதிர்பாராவிதமாக பேருந்து முழுவதிலும் தீ பரவியுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சிலர் உயிர் பிழைப்பதற்காக படுகாயமடைந்து பேருந்தில் இருந்து வெளியே குதித்துள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திருட்டுத்தனமாக எண்ணெய் கடத்தப்பட்டு வந்த வேன் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த சம்பவமானது பாகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.