நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..

கடைகளில் விற்பனையாகும் வல்லாரை கீரையை மிகச்சிறந்த மூலிகையாக நம் தமிழ் சித்தர்கள் கருதுகிறார்கள். இது மிகச்சிறந்த ரத்த விருத்தியாக அறியப்படுகிறது.


  • வல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பதால், மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கிறது.
  • வல்லாரையை பச்சையாக அல்லது பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர நரம்புகள் பலம்பெறும்.
  • வல்லாரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தசோகை நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • காச நோயாளிகளுக்கு வல்லாரை மிகச்சிறந்த மருந்தாகும். அத்துடன் கண் நரம்புகளுக்கும் வலிமையளிக்கும். மாலைக்கண் நோய் குணமாகும்.