யோகி பாபுவுடன் நெருக்கமாக இருந்தது ஏன்? துணை நடிகை சபீதா வெளியிட்ட தகவல்!

புதுமுக நடிகை ஒருவர் வளர்ந்து வரும் காமெடியனுடன் இணைத்து பேசப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.


வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர் காமெடியனாக பணியாற்றிய நிறைய படங்கள் வெற்றி அடைந்துள்ளன. இவர் கடந்த சில படங்களாக சவிதா ராய் என்பவருடன் நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக இருவரை பற்றியும் ஒரு கிசுகிசு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யோகி பாபு மிகவிரைவில் சவிதா ராயை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதற்கு நேற்று யோகி பாபு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஊடகவியலாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் சவிதாராயிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர்.

இவர்கள் அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் சவிதாராய் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது "கடந்த சில நாட்களாக சில தவறான செய்திகளுக்கு சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறேன். யோகி பாபு திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக ஒன்று பரவி வருகிறது. நல்லவேளையாக யோகி பாபு இதற்கு  நேற்றே மறுப்பு தெரிவித்துவிட்டார். அதன் பிறகு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

அவர் கூறியவாறு இவை அனைத்தும் வதந்தி. நானும் யோகி பாபுவும் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறோம். அவ்வாறு 2017ஆம் ஆண்டில் நடித்தார் "கன்னிராசி" என்னும் திரைப்பட படப்பிடிப்பு நானும் அவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டோம். அந்த புகைப்படமானது லீக்காகி, இந்த வதந்திக்கு பெரியதொரு காரணமாகிவிட்டது. நாங்கள் இருவரும் மிகுந்த சிரமப்பட்டு இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்துள்ளோம்.

அதற்கு சற்று மதிப்பு தாருங்கள். மேலும் உண்மையான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தவறல்ல. ஆனால் வதந்திக்கு முக்கியத்துவம் தருவது முட்டாள்தனம்" என்று கூறியுள்ளார்.  இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.