கொடூரமாக கத்தியால் குத்திய மர்ம நபர்கள்! உயிர் போகும் தருணத்திலும் கணவரை நெகிழச் செய்த கர்ப்பிணி மனைவி!

இறக்கும் தருவாயிலும் தன்னுடைய குழந்தையை பற்றி விசாரித்த தாயன்பு தென் ஆப்பிரிக்காவில் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


தென்னாப்பிரிக்காவில் கிரேன் டர்னர் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 31. இவர் அந்நாட்டிலுள்ள பிரபலமான பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். டர்னர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருடைய கணவரின் பெயர் மேத்யூ.

இந்நிலையில் விடுமுறைக்காக தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் ஒரு ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று அவர்களின் அறைக்குள் மர்மநபர்கள் புகுந்தனர். தங்களிடமிருந்த ஆயுதங்களால் டர்னரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மேலும் அவருடைய கணவரையும் கத்தியால் குத்தி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திலேயே டர்னர் உயிரிழந்தார். சம்பவமறிந்து விடுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டர்னரின் கணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மேத்யூ கூறுகையில், "என்னால் இயன்றவரை நான் மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தேன்.

ஆனால் அவர்கள் பால்கனி வாயிலாக தப்பித்து விட்டனர். நான் திரும்பி பார்த்தபோது என்னுடைய மனைவி தரையில் சரிந்தாள். நான் அருகில் சென்றபோது, எங்களுடைய 2 வயது குழந்தையானது பாதுகாப்பாக இருக்கிறதா என்று கேட்டாள்" என்று கதறி அழுதபடி கூறினார்.

காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது தென்னாப்பிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.