உடம்பில் ஒட்டுத்துணி கிடையாது..! நள்ளிரவில் விருதாச்சலத்தை வலம் வரும் மர்ம மனிதன்! பீதியில் பொதுமக்கள்!

விருதாச்சலம் நிர்வாணமாக திருடர்கள் கொள்ளை அடிக்க முயலும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


விருதாச்சலத்தில் ஜமால் பாஷா என்ற தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் ரம்ஜான் அலி என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், இரவு நேரத்தில் இவருடைய வீட்டில் நிர்வாணமாக திருடன் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தோர் அவனை கண்டு கூச்சலிட தொடங்கினர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் அவருடைய வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டான். இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் நிர்வாண திருடனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிர்வாண திருடன் வேறு ஒரு வீட்டில் திருட முயன்ற சிசிடிவி கேமரா பதிவுகளும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி காவல்துறையினர் மிக விரைவில் நிர்வாண திருடனைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த செய்தியானது விருதாச்சலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.