கவுசல்யாவின் நடத்தை சரியில்லை ! உடுமலை சங்கர் கிராம மக்கள் பகீர் புகார்!

கவுசல்யாவின் வீட்டிற்கு இரவில் வெளிநபர்கள் வந்து தங்குவதாகவும், கவுசல்யா நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் உடுமலை சங்கரின் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.


   திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு உட்பட்ட கவுசல்யா, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உட்பட்ட சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கவுசல்யாவின் தந்தை கூலிப்படை மூலம் இருவரையும் கொலை செய்ய முயன்றார். ஆனால் கவுசல்யா தப்பித்துவிட்டார். சங்கர் கொல்லப்பட்டார்.

   கொலைக்கு பிறகு கவுசல்யா சங்கரின் ஊரான குமரலிங்கத்திலேயே தங்கிவிட்டார். உயிரோடு இருக்கும் வரை சங்கரின் பெற்றோரை கவனிப்பது தான் தனது ஒரே முடிவு என்று கவுசல்யா கூறி வந்தார். ஆனால் கவுசல்யாவுக்கு இதற்கு பிறகு முற்போக்கு இயக்கங்கள் என்று கூறிக் கொள்ளும் சில அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தொடங்கினார்.

   இடையே கோவையை சேர்ந்த சக்தி என்பவரின் பறை இசைக்குழுவில் இணைந்து பறை இசை கற்க ஆரம்பித்தார். அப்போது சக்தியுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை தொடர்ந்து அண்மையில் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கவுசல்யா தற்போது வசித்து வரும் சங்கரின் ஊரான குமரலிங்கம் கிராம மக்கள் நேற்று முன்தினம் ஊர் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

   அதாவது இனி சங்கர் பெயரை பயன்படுத்தி கவுசல்யா எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்பது தான் அந்த தீர்மானத்தின் சாராம்சம். தொடக்கத்தில் கவுசல்யாவிற்கு துணையாக இருந்த கிராம மக்கள் திடீரென அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இது குறித்து அறிந்து கொள்ள குமரலிங்கம் கிராம மக்களை தொடர்பு கொண்ட போது, அவர்கள் கவுசல்யா குறித்து பரபரப்பை குற்றச்சாட்டுகளை கூறினர். அதாவது அண்மைக்காலமாக கவுசல்யா வீட்டிற்கு வெளியாட்கள் வந்து தங்குவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

   மேலும் இதுநாள் வரை குமரலிங்கம் கிராமத்தில் நடைபெறாத சம்பவங்கள் எல்லாம் கவுசல்யா வீட்டில் நடப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சங்கர் மரணத்திற்கு பிறகு குமரலிங்கம் கிராமத்திலேயே தங்கி சங்கரின் பெற்றோரை கவுசல்யா கவனித்து வந்த போது எங்களுக்கு சந்தோசமாக இருந்தது, ஆனால் சங்கர் ரத்தம் காய்வதற்குள் கவுசல்யா மறு கல்யாணம் செய்ததை தான் எங்களால் ஜீரனிக்க முடியவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கவுசல்யாவின் நடத்தையில் தற்போது மாற்றம் தெரிகிறது.

   கடந்த வாரம் இரண்டு பெண்கள் கவுசல்யா வீட்டிற்கு வந்து தங்கினர். அவர்களை தேடி நள்ளிரவு போலீசார் கவுசல்யா வீட்டிற்கு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் எல்லாம் குமரலிங்கம் கிராமத்தில் இதுவரை நடைபெற்றது இல்லை. கவுசல்யா தற்போது அரசுக்கு எதிரான இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார், அரசை விமர்சிக்கிறார், இதெல்லாம் எதற்கு என்று எங்களுக்கு புரியவில்லை. மேலும் பறை இசை பயிற்சி அளிப்பதாக கூறி கிராம சிறுவர்களை கவுசல்யா அழைத்துச் செல்வதால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

   கவுசல்யாவின் 2வது கணவர் சக்தி மீது பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்துஅடங்கியது. தற்போது கவுசல்யாவின் நடத்தையை சந்தேகித்து வெளியாகும் புகார்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது