5 மாத குழந்தை முன் கழுத்து அறுத்து வீசப்பட்ட இளம் கணவன்-மனைவி! நாமக்கல்லில் ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்!

மர்ம நபர்கள் வீடு புகுந்து இளம் தம்பதியினரை கொலை செய்த சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு அருகே விமல் னராஜ் என்பவர் பழக்கடை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு விசாணம் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 5 மாத குழந்தையுள்ளது. அனைவரும் அனிதாவின் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே நேற்றிரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து, அனிதா, விமல் ராஜ் மற்றும் அனிதாவின் தந்தையான கருப்பசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மர்ம நபர்கள் கொலை செய்த பிறகு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 

வெளியே சென்றிருந்த அனிதாவின் தாயார் வீடு திரும்பிய போது, அனிதா, விமல்ராஜ் உயிரிழந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர் கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவமறிந்து விரைந்து காவல்துறையினர் இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக கொலை நடத்தப்பட்டதா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அணிதாவின் அண்ணனான அருண் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நபருக்கும் முன்விரோதம் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதற்காக கொலை நடந்துள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர் மீது சந்தேகப்படும் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

தனிப்படை அமைத்து காவல்துறையினர் இரட்டை கொலையில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.