கட்டிய மனைவி! பெற்ற 3 குழந்தைகள்! துடிக்க துடிக்க கழுத்தை அறுத்த ட்யூசன் வாத்தியார்! பதற வைக்கும் காரணம்!

தனியார் டியூஷன் வாத்தியார் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உபேந்திரா ஷுக்லா என்பவர் புதுடெல்லியில் தனியார் டியூஷன் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு தகராறுகள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் இன்று காலை இவர்களின் அறை கதவை பூட்டி உபேந்திரா வீட்டை விட்டு வெளியேறினார்.

சம்பவத்தை கண்ட உபேந்திராவின் மாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினரை வரவழைத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உபேந்திராவின் மனைவியும், 3 குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.

அந்த அறையில் ஏதோ ஒரு பேப்பரில் "நான் தான் தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றேன்" என்று எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பின்னர் காவல் துறையினர் உபேந்திராவை வலை வீசி தேடி கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உபேந்திரா மன அழுத்தத்தில் இருந்ததால் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் கொலை செய்த நோக்கத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.