வீட்டில் மனைவி இல்லை என்றால் மகள் தான்..! தூத்துக்குடியில் சிக்கிய பாலியல் அரக்கன்! அதிர்ந்த உறவுகள்!

குடிபோதையில் மகளை அடிக்கடி மிரட்டி தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடி அருகே நடைபெற்றுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் குடிபோதைக்கு அடிமையான கூலித் தொழிலாளி ஒருவர் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். குடித்து விட்டு வரும் அவர் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகமுற்ற தாய் என்னவென்று மகளிடம் விசாரித்து உள்ளார். ஆனால் சொல்ல மறுத்து தேம்பி தேம்பி அழுதார் மகள். பின்னர் என்னவென்று தாய் தீவிரமாக விசாரிக்க தந்தை தன்னை தினமும் செய்த சித்ரவதைகளை சொல்லி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார்.

புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையே தனது மகளுருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்திலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் தந்தை மற்றும் தாயின் அரவணைப்புதான். அங்கும் பாதுகாப்பு இல்லையென்றால் அவர்கள் எங்குதான் செல்வார்கள்.