லிஃப்ட் கேட்டு காரில் ஏறிய திருநங்கை! உல்லாசத்துக்கு மறுத்ததால் நேர்ந்த விபரீதம்!

செக்ஸ் உறவுக்கு மறுப்பு தெரிவித்த திருநங்கையை துப்பாக்கியால் சுட்டு, காரில் இருந்து தள்ளிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தலைநகர் டெல்லியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிறன்று, திரிலோகபுரியில் இருந்து பாரபுல்லா செல்லும் சாலையில் சாகுர் குமார் என்கிற லம்பாக் மற்றும் சந்திரா காந்த் ஆகியோர் காரில் சென்றுள்ளனர். இவர்கள் உள்ளூர் தாதாவான சுந்தர் பாட்டி குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது வழியில், 21 வயதான திருநங்கை ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். அவரை காரில் ஏற்றிக் கொள்ளும்படி சந்திரா காந்த் கூறியுள்ளார். அதன்படி, திருநங்கை காரில் ஏறிய நிலையில், அவர் மீது, லம்பாக் காமவெறி கொண்டுள்ளார். 

அந்த திருநங்கையை பலாத்காரம் செய்வதற்கு, லம்பாக் முயற்சி செய்துள்ளான். ஆனால், திருநங்கை மறுத்து தெரிவித்து, கூச்சலிட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த லம்பாக், அவரை துப்பாக்கியால் சுட்டு, ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டார். 

திரிலோகபுரி மேம்பாலத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. அவ்வழியே சென்றவர்கள், திருநங்கை ஒருவர் சாலையில் விழுந்ததைக் கண்டு, அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அபாயக்கட்டத்தில் இருந்து அவர் மீண்டுவிட்டார். 

அதேசமயம், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய கார், திரிலோகபுரி பகுதியில் அடிக்கடி வலம் வருவதை, போலீசார் கண்டுபிடித்தனர். அது ஒரு வாடகை கார் என்றும் தெரியவந்தது. அந்த கார், அன்றைய இரவு லாலா லஜபதி ராய் மார்க் வழியாக, வந்தபோது, அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது, கட்டுக்கடங்காத வேகத்துடன், போலீஸ் தடுப்பில் மோதி, கார் நின்றுள்ளது. உள்ளே இருந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 

அவரை விசாரித்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்திய லம்பாக், அவர்தான் எனத் தெரியவந்தது. அத்துடன், தனது நண்பர் சந்திரா காந்தும் அப்போது உடன் இருந்ததாக, அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.