காதலிக்குறேன்னு சொன்னான்! நம்பி எல்லாத்தையும் கொடுத்தேன்! திருநங்கைக்கு இளைஞனால் ஏற்பட்ட பயங்கரம்!

காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் திருநங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நடைபெற்றுள்ளது.


ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தில் வசித்து வந்தார் திருநங்கை சுஸ்மிதா. இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அன்புடனும், பாசத்துடனும், உல்லாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திருநங்கை சுஸ்மிதா கேட்க அதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த இளைஞர்தான் எதிர்காலம் என நம்பி காதலித்து வந்த திருநங்கை மனம் உடைந்தார். இந்த நிலையில் வீடடில் யாரும் இல்லாததால் திருநங்கை மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.