ஒரே தண்டவாளம்..! அசுர வேகத்தில் வந்த 2 ரயில்கள்! ஒரு நொடி பயங்கரத்தில் பறிபோன 16 உயிர்கள்! பதைபதைக்க வைக்கும் விபத்து!

ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 16 பேர் உயிரிழந்த சம்பவமானது வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேசத்தில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் தலைநகரான டாக்காவை நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பிரமன்பிரியா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, சிட்டகாங் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தானது அதிகாலையில் நிகழ்வுகள் நிறைய பேர் தூக்கத்திலிருந்து உள்ளனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர். இரு ரயில்களையும் சேர்த்து 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் காயமடைந்தோர் மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது வங்காளதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.