நைட் ஆனா தப்பு தப்பு போன் கால்ஸ் வருது..! என் மனைவியை சந்தேகப்படுறாங்க! போலீஸ் ஸ்டேசனில் கான்ஸ்டபுளுக்கு நேர்ந்த பரிதாபம்!

தான் அளித்த புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை போக்குவரத்து காவலர் ஒருவர் குற்றஞ்சாட்டியது கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவலராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக இவருடைய மனைவியின் செல்போனுக்கு தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன. மேலும், மறுமுனையில் இருந்து பேசும் நபர்கள் தவறான முறையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இவருடைய புகாரை கண்டுகொள்ளவில்லை. மேலும், மனைவியின் மீது சந்தேகப்பட்டு காதலிப்பதாக கூறி கார்த்திக் மீதே வழக்குப்பதிவு செய்யப்போவதாக கூறி அவரை மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் தனது நிகழ்ந்தவற்றை ஒரு வீடியோவில் கூறி, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் காவல்துறை உயரதிகாரிகள் தான் அளித்த புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.