ரசிகர்களை ஏமாத்த விரும்பல! 90ஸ் கிட்ஸ் பேவரிட் டாப் 10 மூவிஸ் நிறுத்தப்பட்டது ஏன்? சுரேஷ் குமார் கூறும் உண்மை!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சி தற்போது நிறுத்தப்பட்டது ஏன் ? என்று அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுரேஷ்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதற்கான காரணங்களை தெளிவாக கூறியிருந்தார். பொதுவாகவே ஒரு புதிய திரைப்படம் வெளியானால் அந்த திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பாக அதனுடைய விமர்சனங்களை பார்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வகையில் பல வருட காலமாக  திரைப்படங்களின்  விமர்சனத்தை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் நச்சுனு மக்களுக்கு எடுத்துரைத்தவர் தான் தொகுப்பாளர் சுரேஷ்குமார். ஒவ்வொரு வாரமும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் முதல் 10 இடங்களை பிடிக்கும் திரைப்படங்களின் வரிசையை விமர்சனம் செய்பவர் இவர்.

தற்போது திடீரென்று ஏன் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது என்று பலரும் தொகுப்பாளர் சுரேஷ்குமார் இடம் கேள்வி எழுப்பி வருகின்றன. சுரேஷ்குமார் பேசுகையில் அந்த நிகழ்ச்சியை நிறுத்தி அதற்கான காரணத்தை தெளிவாக கூறினார். முன்பெல்லாம் ஒரு புதிய திரைப்படத்தின் விமர்சனத்தை காண வேண்டும் என்றால் அனைத்து ரசிகர்களும் தொலைக்காட்சி முன்பு தான் அமர்ந்து இருப்பார்கள் .

ஆனால் தற்போது அப்படி அல்ல. விமர்சனங்களை பார்க்க விரும்புவோர் மொபைல் போனை தான் முதலில் தேடுகிறார்கள் காரணம் இணையத்தில் பல புதிய  விமர்சகர்கள் தோன்றியுள்ளனர். அவர்கள் கூறும் விமர்சனங்களை பார்க்கவே மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றன .இது ஒரு  காரணமாக கூறலாம் .

ஆனால் இது மட்டுமல்ல இதற்கு ஒரு வேறொரு முக்கிய காரணமும் உள்ளது.முன்பெல்லாம் ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் அந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் டிரைலர் மற்றும் வீடியோ கிளிப்பிங் என அனைத்துமே  சேனல்களுக்கு திரைப்பட குழுவினர் சார்பில் ஒவ்வொரு சேனல்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் .

இதன் மூலம் தான் அவர்களுடைய திரைப்படத்தை மக்களிடம் விளம்பரம் செய்வார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உண்டான சாட்டிலைட் உரிமத்தை  சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் கொடுத்துவிடுவார்கள்.

அப்படி கொடுக்கும்பட்சத்தில் அந்த படத்திற்கான உரிமம் பெற்ற சேனல் மட்டும் தான் அந்த திரைப்படத்தை விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர மற்ற சேனல்களுக்கு  அந்த படத்தை விமர்சனம் செய்யும் அனுமதி கிடையாது.

இந்த வகையில் பார்க்கும் பொழுது ஒரு வாரத்தில்  பத்து படங்கள் திரைக்கு வெளிவரும்  போது அதில் 4 திரைப்படங்களின் உரிமத்தை மற்ற சேனல்கள்  பெற்றுவிட்டால் அந்த 4 படத்தின் விமர்சனத்தை நாங்கள் செய்ய இயலாது. ஆகவே எங்களால் சரியாக தரவரிசையில் படங்களை அறிவிக்க இயலாது. இதுவே இந்நிகழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி அதன் காரணம்.

ஏனெனில் மக்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. அவர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார் சுரேஷ்குமார். தற்போது இந்த நிகழ்ச்சி  நிறுத்தப்பட்ட பின்பு தொகுப்பாளர் சுரேஷ்குமார் யூடியூபில்  புதிய திரைப்படங்களுக்கான விமர்சனங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.