சடலங்களை எரிக்கும் சுடுகாட்டில் குவியல் குவியலாக கிடந்த பொருள்..! போட்டி போட்டுக் கொண்டு மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்ற மக்கள்..! என்ன, எங்கு தெரியுமா?

சுடுகாட்டில் குவியல் குவியலாக இருந்த அரிசி முட்டைகளை மக்கள் பிரித்து எடுத்து சென்ற சம்பவமானது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள், நலிவடைந்தோர் ஆகியோர் உணவில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசாங்கமும் அவர்களுக்கு நியாயவிலைக் கடைகளின் மூலம் உணவு தயாரிக்க தேவையான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட போடியில், சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக அரசு கிடந்ததாக சுற்று வட்டார மக்களுக்கு தகவல்கள் கிடைத்தன. உடனடியாக மக்கள் அனைவரும் சுடுகாட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அரிசி மூட்டைகளாகவும், கொட்டப்பட்டும் கிடந்தன.

பிரிக்காத அரிசி மூட்டைகள் ஒரு பக்கமாகவும், பிரிக்கப்பட்டு சிதறிய அரசுகள் ஒரு குவியலாக மற்றொரு பக்கத்திலும் வைக்கப்பட்டிருந்தன. அங்க வந்த மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு அரிசியை எடுத்துக்கொண்டு சென்றனர்.

ஆனால் வீட்டிற்கு சென்று சமைத்து பார்த்தபோதுதான் அரசியில் புழுக்கள் இருந்ததும், கெட்டுப் போயிருந்தது மக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அரிசி மூட்டைகள் சுடுகாட்டில் குறிக்கப்பட்டிருந்தது அப்பகுதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தனர்.

அவர்களும் அரிசி மூட்டைகளை யார் சுடுகாட்டில் கொட்டுவது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.