உன் மார்பகங்கள் ஏன் இப்படி இருக்கிறது? ரசிகர் கேட்ட விபரீத கேள்வி! நடிகை அளித்த நெத்தியடி பதில்!

என்னதான் உலகம் நாகரீகமடைந்து முன்னேறிக் கொண்டே சென்றாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவ்வப்போது அனைத்து தளங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டு கொண்டே இருக்கிறது.


நேரடியாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ பெண்களின் மீது அத்துமீறுவது தற்போது வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது. 5 வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டிகள் வரை இந்த அவலங்களை தொடர்ந்து கொண்டே உள்ளதை நாம் கண் முன்னே பார்த்து வருகிறோம் 

இதில் பிரபலமானவர் பிரபல மற்றவர் என்ற பாகுபாடு கிடையாது. பெண்கள் என்றாலே அவர்களை பார்த்ததும் ஆபாசமாக கமெண்ட் அடிப்பது அல்லது ஏதாவது செய்வதே என பல காமுகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்வஸ்திகா முகர்ஜி என்னும் வங்காள நடிகை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

 மேலும் நாம் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதும் அற்புதமாக இருக்க வேண்டும் இல்லையெனில் நம்மை பார்ப்பவர்கள் நமது உடல் பாகங்கள் மீது மோசமான கமெண்ட் அடிப்பார்கள் என்றும் பதிவிட்டு இருந்தார்.  இந்த புகைப்படத்தை பதிவிட்டு நீங்கள் உங்கள் மார்பகத்தையும் மற்ற உடல் பாகங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி இல்லை எனில் அறுவை சிகிச்சை செய்தாவது சரிசெய்து கொள்ளுங்கள் இல்லையெனில் உலகம் உங்களை கிண்டல் செய்யும் என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை இவர் இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த பலர் உங்களது மார்பகம் சற்று சாய்ந்து கொண்டிருப்பது போல் இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர்.

அதற்கு ரிப்ளை செய்த ஸ்வதிகா, என்னுடைய மார்பகம் அப்படித்தான் இருக்கிறது அது எனக்கு பிடித்து இருக்கிறது. நீங்கள் இதனைப் பற்றி பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள் என்று அந்த குறிப்பிட்ட சில ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.