தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மஞ்சு மனோஜ்.
திருமணம் ஆகி 4 ஆண்டுகள்..! குழந்தை இல்லை..! மனைவியை பிரிந்த பிரபல நடிகர்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆவார். அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பிரணதி ரெட்டி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் மனோஜ் , தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் சந்தோஷமாக நடைபெற்ற இவர்களது திருமணம் தற்போது பிரிவில் முடிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சு மனோஜ் சமீப காலமாகவே தன்னுடைய மனைவி பிரணதியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது பிரிவைப் பற்றி இவர்களது ரசிகர்கள் பலவிதமாக பேசி வந்தனர்.
தற்போது இவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் , தன்னுடைய மனைவி பிரணதியை விவாகரத்து செய்யப்போவதாக மஞ்சு மனோஜ் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பதிவில் தன்னுடைய திருமணபந்தத்தில் ஏற்பட்ட முடிவைப் பற்றியும் அதனால் அவருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்தை பற்றியும் மிகவும் உருக்கமாக கூறியிருந்தார் நடிகர் மஞ்சு மனோஜ். அது மட்டும் இல்லாமல் தன்னை இதுநாள்வரை ஆதரித்து வந்த ரசிகர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இது தான் விவாகரத்திற்கு முக்கி காரணம் என்று கூறப்படுகிறது.