ஊரக உள்ளாட்சி தேர்தல்! வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது!

தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.


தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 

இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் மூன்று கட்டமாக ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.திமுக சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக அறிவித்தது.