சன் ரைசரை அடிச்சு தூக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

இன்றைய ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜிவ் காந்தி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது வரை விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இது வரை விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

சன் ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் மனிஷ் பாண்டே மற்றும் யூசுப் பதானை அணியில் இருந்து நீக்கியது. அனால் கடைசி போட்டியில் இந்த மாற்றம் சரியாக எடுபடவில்லை. இதனால் இந்த போட்டியில் இவர்கள் விளையாட வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அணியை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. மேலும் காயம் காரணமாக இடம் பெறாத பிராவோ நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். எனினும் சென்னை அணி வலுவாக உள்ளதால் அவரை அணியில் உடனடியாக சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை. அவர் பூரண குணமடைந்த பிறகே அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.