தூக்கில் தொங்கிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

ரஞ்சி கோப்பையில் நீண்ட காலம் விளையாடியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்


முன்னாள் கிரிக்கெட் வீரரான  சந்திரசேகர், இவருக்கு வயது 58. இவர் சென்னை , மயிலாப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரபுரம் என்னும் பகுதியில் வசித்து வந்தார்.

சென்னையில் பிறந்த இவர் சென்னை மற்றும் கோவா அணிக்காகவும்  விளையாடி உள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் ப்ரீமியர் லீக் - காஞ்சிபுரம் அணியின்  உரிமையாளர் ஆவார். இந்த  2019 ஆம் ஆண்டிற்கான TNPL போட்டியின் அரையிறுதியில்   இவருடைய சொந்த அணியான காஞ்சிபுரம் வாரியர் அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவர் தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் 1988 மற்றும் 1990 களில்  நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதுமட்டுமல்லாமல் சமீப காலமாக கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளர் ஆகவும் இருந்து வருகிறார். தன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டி காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த இவர் திடீரென்று நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இவரது உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.