டைம்ஸ் தமிழ் 2018 சினிமா விருது – 5 விருதுகள் அள்ளிய 96

சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (96) காலா படத்தில் ரஜினிகாந்த் மிகச்சிறப்பாக நடித்திருந்தாலும், நாற்பது வயதில் வெட்கத்தையும் காதலையும் பூ போன்று காட்டிய விஜய் சேதுபதி 2018ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருதை தட்டிச் செல்கிறார். அடுத்த சூப்பர்ஸ்டார் நீதான் தல.


சிறந்த நடிகை : நயன் தாரா (கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்)

நயந்தாராவுக்கு அருகே வந்த ஒரே நடிகை யு டர்ன் படத்தில் நடித்த சமந்தா மட்டும்தான். ஆனால், அந்தப் படத்தில் பயப்படுவது தவிர வேறு வகையில் சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு சமந்தாவுக்கு இல்லை என்பதால் நயன் விருதைத் தொடுகிறார். அழகே அள்ளுதே..


சிறந்த படம் : பரியேறும் பெருமாள்

சிறந்த படம் பட்டியலில் காலா, ராட்சசன், 96 ஆகிய படங்கள் இருந்தாலும், நாட்டுக்கு சொலல்வேண்டிய நல்ல கருத்தை நச்சென்று சொன்னதற்காக பரியேறும் பெருமாள் சிறந்த படம் விருதை தட்டிச் செல்கிறது. செம மாஸ்


சிறந்த கலைப்படம் : மேற்குத் தொடர்ச்சி மலை

கேனத்தனமாக ஷங்கர் போன்று செட் போட்டும் டெக்னாலஜியையும் நம்பிக்கொண்டிராமல் உண்மையான மலையின் மீது ரசிகர்களை கூட்டிச்சென்ற மேற்குத் தொடர்ச்சி மலை சிறந்த கலைப்படம் விருது பெறுகிறது. கைதட்டல்


சிறந்த இயக்குனர் : பா.ரஞ்சித் (காலா)

சிங்கத்தை அடக்குவதுதான் கலை.. அந்த வகையில் சூப்பர்ஸ்டாரை தன்னுடைய வட்டத்திற்குள் அடக்கிவைத்து, நிலம் என் உரிமை என்பதை உரக்கச் சொல்லவைத்த ரஞ்சித் மிக எளிதாக சிறந்த இயக்குனர் விருதுக்கு தகுதி பெறுகிறார். இனியும் உரக்கச் சொல்லுங்க பாஸ்


சிறந்த இசையமைப்பாளர் :கோவிந்த் வசந்தா (96)

உணர்வுபூர்வமான படத்துடன் ஒன்றிப்போக வேண்டுமென்றால் அங்கே இசை உயிர்ப்புடன் இருக்கவேண்டும்.. நாயகியைப் பார்த்ததும் துள்ளும் அந்த வயலினுக்காகவே இசை அமைப்பாளர் விருதை தட்டிச் செல்கிறார் கோவிந்த். நெஞ்சை கிழிச்சிட்டீங்களே


சிறந்த ஒளிப்பதிவாளர் : தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

என்ன காட்டவேண்டுமோ அதை மட்டும் இயல்பாக காட்டி, கேரக்டராகவே ஒன்றிப்போக வைத்ததில் கேமராவுக்குத் தனியிடம் உண்டு. சூப்பருங்கண்ணா...


சிறந்த கதை : பாண்டிராஜ் (கடைக்குட்டி சிங்கம்)

எல்லா காலத்திலும் குடும்பக் கதையை சரியான வழியில் சொன்னால், ரசிப்பதற்கு மக்கள் தயார் என்பதை நிரூபித்துக்காட்டிய பாண்டிராஜ்க்கு ஒரு ஓ போடுறோம்.


சிறந்த திரைக்கதை : ராட்சசன் (ராம்குமார்)

எந்த நேரம் என்ன நடக்கும் என்று யூகிக்கமுடியாமல், அதேநேரம் கதையில் இருந்தும் விலகாமல் நேர்த்தியாக கதை சொன்ன ராம்குமாருக்கு ஒரு சலாம்.


சிறந்த வசனகர்த்தா : பிரேம்குமார் (96)

சந்தோஷமாக இருக்கியா என்ற நாயகன் கேள்விக்கு, நிம்மதியா இருக்கேன் என்ற நாயகியின் பதில் ஒரு ஹைகூ கவிதை என்றால், படம் நெடுக கொண்டாட்டம்தான். ரொம்பவும் காதலிக்கிறோம்பா….

சிறந்த வில்லன் : அர்ஜுன் (இரும்புத்திரை)

நடிகை ஸ்ருதி ஹரிகரன் அர்ஜுன் மீது ஒடுத்த மீ டூ புகாருக்காக இந்த விருது கொடுக்கவில்லை என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறோம். ஸ்டைலிஷ் வில்லனா கெத்து காட்டுனப்பா… கலக்கு ராசா…

இவர்களைத் தவிரவும் மற்ற பிரிவுகளில் டைம்ஸ் தமிழ் விருதுபெறும் நட்சத்திரங்களை மனமார வாழ்த்துகிறோம்.

சிறந்த குணச்சித்திர நடிகர் : முனீஷ்காந்த் (ராட்சசன்)

சிறந்த குணச்சித்திர நடிகை : ஈஸ்வரிராவ் (காலா)

சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (கடைக்குட்டி சிங்கம்)

சிறந்த புதுமுக நடிகர் : ஆண்டனி (மேற்குத்தொடர்ச்சி மலை

ஸ்பெஷல் வெல்கம் அவார்டு : விஜய் தேவரகொண்டா (நோட்டா)

சிறந்த புதுமுக நடிகை : கவுரி (96)

சிறந்த பாடகர் : மெர்வின் சாலமன் (சேராமல் போனால் – குலேபகாவலி)

சிறந்த பாடகி : சின்மயி (காதலே காதலே… 96)

சிறந்த டான்ஸ் மாஸ்டர் : ஜானி (குலேபகாவலி)

சிறந்த சண்டை பயிற்சி : விக்கி (ராட்சசன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் : மானஸ்வி (இமைக்கா நொடிகள்)

சிறந்த ஐட்டம் சாங் : ஒரு குச்சி ஒரு குல்ஃபி (கலகலப்பு 2)

சிறந்த கவர்ச்சி நடிகை : யாஷிகா ஆனந்த் (இருட்டு அறையில் முரட்டு குத்து)