வெறும் ஒன்பதே ரூபாயில் வியட்நாமுக்கு செல்லலாம்..! எப்படி தெரியுமா?

வியட்நாமைச் சேர்ந்த வியட்ஜெட் எனும் விமான நிறுவனம். வருகின்ற திசம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குநேரடி விமான சேவையை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.


ஏற்கனவே இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவும். இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் இருந்து வவியட்ஜெட் ஹோ சி மின் நகரத்திற்கு 9 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அந்த நிறுவனம் . 

திசம்பர் மாத பயணத்திற்கு, இந்த ஆகஸ்டு 20 முதல் 22ம் தேதி வரை டிக்கெட்டுகான முன்பதிவு விற்பனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம். இதற்காக 8 ஆயிரம் டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது இந்த நிறுவனம்.  

வியட்நாமின் ஹோ சி மின் சிட்டி - புது தில்லி வழித்தடத்தில் முறையே திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு நான்கு முறை இயக்கவுள்ள தாகவும். இதன் முதல் பயணம் டிசம்பர் 6 அன்று தொடங்கும் என தெரிவித்துள்ளது. 

வியட்ஜெட்டின் துணைத் தலைவர் நுயேன் தான்சன் கூறுகையில். இந்தியா எங்கள் நாட்டின் வியாபார சந்தைப்படுத்தலில் முன்னுரிமையான ஒரு நாடாகும். வளர்ந்து வரும் எங்கள் நிறுவனத்திற்கு இந்தியாவுடனான வணிகத் தொடர்பு ஒரு கூடுதலான மதிப்பு என தெரிவித்துள்ளார்,

வியட்ஜெட் நிறுவனம் ஏற்கனவே மார்ச் 2018 இல் ஹோ சி மின் நகரத்திலிருந்து டெல்லிக்கு வாராந்திர விமான போக்குவரத்து திட்டத்தை அறிவித்திருந்தது. அதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டிலும், இந்த வழியில் மூன்று வாராந்திர சேவைகளை செயல்படுத்த அது திட்டமிட்டிருந்தது.

இந்திய வியட்நாம் விமானப் போக்குவரத்துத் துறையிடம் இருந்து சரியான ஒப்புதல்கள் கிடைக்காத காரணத்தினால். இதற்கு முன் தனது விமான பயணத்தை தொடங்க முடியவில்லை என்று கூறுகிறது அந்த நிறுவனம்.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏற்கனவே அக்டோபர் முதல் வியட்நாமிற்கு விமான சேவைகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 3 முதல்,

இருநாட்டு அரசாங்க ஒப்புதல்களுக்கு உட்பட்டு, இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கொல்கத்தா மற்றும் ஹனோய் இடையே. தினசரி விமானங்களை இயக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​வியட்ஜெட் நிறுவனம் தினசரி 400 விமானங்களை இயக்குகிறது என்றும். 80 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் தங்கள் விமான சேவையை உபயோகபடுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

129 வழித்தடங்களில் விமானப் போக்குவரத்து சேவையை செய்து வரும் இந்த நிறுவனம் வியட்நாம் மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களில் விமான போக்குவரத்து பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

இந்தியா மற்றும் வியட்நாம் விமானங்களுக்கான முன்பதிவு செய்ய வலைத்தள முகவரரி (www.vietjetair.com), மொபைல் அப்ளிகேஷன் (m.vietjetair.com) அல்லது வியட்ஜெட்டின் பேஸ்புக் பக்கம் மூலம் முன்பதிவு செய்யும்படிப அறிவித்துள்ளது வியட் ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம்.

மணியன் கலியமூர்த்தி.