நெற்றிக் கண்ணுடன் வலம் வரும் பாம்பு! பீதி கிளப்பும் புதிய படைப்பு!

ஆஸ்திரேலியாவில் 3 கண் உள்ள பாம்பு ஒன்றை பார்த்து, பலரும் வியப்படைந்துள்ளனர்.


அந்நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள வன உயிரின காப்பகம் சார்பாக, ஃபேஸ்புக்கில் சில புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. அதில், கார்பெட் மலைப்பாம்பு ஒன்று, பிறந்து 3 மாதங்களேஆன நிலையில், ஆர்ன்ஹம் நெடுஞ்சாலையில், கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே அந்த பாம்பு இறந்துவிட்டது.

அதனை வனத்துறையினர் பரிசோதனை செய்தபோது, அதன் உடலில் வித்தியாசமான அமைப்பு இருப்பதை கண்டறிந்தனர். அதாவது, அந்த பாம்புக்கு, 3 கண்கள், ஒரே மண்டையோட்டில் இருந்துள்ளன. இது மரபியல் ரீதியான ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆனால், சரியான உணவு கிடைக்காமல் அந்த பாம்பு இறந்துவிட்டதாக, ஃபேஸ்புக் பதிவில் தகவல் கூறப்பட்டுள்ளது. 

இதுபற்றி பிபிசியும் செய்தி வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உடலமைப்பு காரணமாக, உணவை சரியாக சாப்பிட முடியாமல் இந்த பாம்பு இறந்துவிட்டதாகவும், வன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.  அதேசமயம், சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக, வன உயிரினங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.