முதல் 2 கணவர்கள் டைவர்ஸ்! சரத்குமார், ராதிகாவின் 3வது கணவரானது எப்படி? டாப் சீக்ரெட் லீக்!

நடிகர் சரத்குமாருக்கும், ராதிகா சரத்குமாருக்கும் ஏற்பட்ட காதல் கதையானது அனைவரையும் வியக்க வைக்கிறது.


நடிகை ராதிகா சரத்குமார் பாரம்பரிய திரையுலக குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை நடிகவேல் இன்று புகழ்பெற்ற பிரபல நாத்திகவாதியான எம்.ஆர்.ராதா என்பவராவார். எம்.ஆர்.ராதாவின் 3-வது மனைவி இலங்கை நாட்டை சேர்ந்தவர். அவருடைய பெயர் கீதா. கீதாவுக்கு மகனாக பிறந்தவர் ராதிகா.

கோலிவுட் திரையுலகில் கால் பதித்தவுடனே 1985-ஆம் ஆண்டில் இயக்குனர் பிரதாப் போதனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரை அடுத்த ஆண்டே பிரிந்து விட்டார்.

‌அதன் பின்னர், லண்டன் நாட்டில் ஹார்டி என்பவரை 1990-ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 1992-ஆம் ஆண்டிலேயே விவாகரத்து பெற்றனர். இத்தம்பதியினருக்கு ரயான்னே ஹார்டி என்ற மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், கோலிவுட் திரையுலகில் சரத்குமாருடன் இணைந்து நடிக்க தொடங்கினார். அப்போது இருவரும் நல்ல நண்பர்களாகினர். கோலிவுட்டில் நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம், ரகசிய போலீஸ் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். 

இருவருக்குமிடையே இருந்த நட்பானது காதலாக மாறியது. இருவருக்கும் பிடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இணைந்து வாழ்ந்து வருகின்றனர். 

சரத்குமாருக்கு ராதிகா 2-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாரின் மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் கோலிவுட் திரையுலகில் கலக்கி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.