நான் தெலுங்கன்! தெலுங்கர்கள் இல்லைனா தமிழகமே இல்லை! தமிழன்னு பேசுறது வேஸ்ட்! சீமானுக்கு ராதாரவி வைத்த சூடு!

தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்களை ஒதுக்கி வைத்தால் பெரிய கலவரம் வெடிக்குமென்று நடிகர் ராதாரவி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் தெலுங்கு கூட்டமைப்பு சங்கம் சென்னையில் தலைமையாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் சென்னை வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் "நடிகவேல்" எம்.ஆர்.ராதாவின் 40-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசுகையில், "திராவிட இயக்கமானது என்னுடைய தந்தையாரை மறந்துவிட்டது. நான் எப்பொழுதும் என்னை ஒரு தெலுங்கன் என்றுதான் அறிமுகம் செய்து கொள்வேன்.

தெலுங்கர்களை அன்னியர்களால் சில தமிழ் மக்களுக்கு சில செய்திகளை கூறுகிறேன். தமிழகத்தில் தெலுங்கர்களை விலக்கிவிட்டு நீண்ட நாட்கள் தமிழர்களால் சுயமாக வாழ இயலாது. மேலும் தெலுங்கர்களை ஒதுக்கிவைத்தால் 25% சதவீத ஓட்டுகள் கிடைக்காது" என்று கூறினார்.

ராதாரவியின் இந்த பேச்சானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.