கடன் மேல் கடன் வாங்கும் நிலை..? ஜாதக பரிகாரம் செய்தால் போதும், நிலைமை தலைகீழாய் மாறும்.

ஒரு ஜாதகத்தில் 12 கட்டத்தில் நம் அனைவருக்கும் முக்கியமான கட்டமாக கருதப்படுவது ஆறாமிடம் என்று சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு ஸ்தானம் தான்.


ஜாதகத்தில் இந்த ஒரு ஸ்தானத்திற்கு மட்டும் மூன்று காரகங்களை கொடுத்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவங்கள் உள்ளன. குரு என்றால் தன காரகன், சுக்கிரன் என்றால் களத்திர காரகன், புதன் என்றால் புத்தி காரகன், சூரியன் என்றால் பிதுர் காரகன், சந்திரன் என்றால் மாதுர் காரகன் என்றும் அழைக்கின்றனர்.

ஆனால் இந்த சனிக்கு மட்டும் நோய் காரகன், ருண காரகன் அதாவது கடன் காரகன் மற்றும் ஆயுள் காரகன் என்றெல்லாம் உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவருக்கு கடன் தொல்லை இருக்காது. அதற்காக சனி பகவானை மட்டுமே வைத்து கொண்டு கடன் சுமையை பற்றி பார்க்க முடியாது. ஒவ்வொரு ஜாதகத்திற்கும் கடன் ஸ்தானம் என்பது வேறுபடும். அது அமைந்துள்ள சாரம் மற்றும் பார்வை உள்ளிட்ட ஜாதக கிரக நிலையை ஒட்டியும் பலன் சொல்லவேண்டும்.

பொதுவாக ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதியாகிய கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதன்படி அதற்கு ஏற்ப கடன் வாங்குவார்கள். இந்த ஸ்தானாதிபதி மறைவு ஸ்தானங்களில் உள்ளாரா அல்லது உச்ச ஸ்தானத்தில் உள்ளாரா அல்லது நீச்ச ஸ்தானத்தில் யாரிடம் தொடர்பில் உள்ளார், யார் பார்வை உள்ளது, கூட்டு கிரகங்களின் சேர்க்கை மற்றும் லக்னாதிபதியின் பலம் என்ன என்பதை பொருத்தும் அவர் அந்தக் கடனை அடைக்க இயலும் அல்லது இயலாது என்பதை அறியமுடியும். பொதுவாக சுக ஸ்தானாதிபதியாகிய கிரகம் நன்கு இருந்து ருண ஸ்தானாதிபதியும் தீய ஸ்தானங்களில் இருந்து செவ்வாய் பலவீனப்பட்டு இருந்தால் நிச்சயமாக வீட்டுக் கடனை அடைப்பது மிகவும் சிரமமே.

கடன்கள் சீக்கிரம் அடைய பரிகாரம்.

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு வில்வ இலை மாலையை சாற்றி ஆறு நெய் தீபங்களை ஏற்றி வழிபடலாம். இப்படி தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்து வர வேண்டும்.

பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் முருகப் பெருமானையும் வழிபட்டு வரலாம்.

திங்கட்கிழமைகளில் பெருமாளை திருப்பதியிலோ அல்லது அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கோ சென்று வழிபட்டு வந்தால் கடன் சுமை தீரும்.

திருவாரூர் அருகே உள்ள திருச்சேரை என்னும் ஊரில் ருண விமோசகர் என்று சொல்லப்படும் சிவபெருமான் கோயிலுக்கு செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வருவது நல்லது. தவிர ருண விமோசன ஸ்தோத்திரம் படிப்பதும் நல்லது. ருண என்றால் கடன், விமோசனம் என்றால் விடுபடுதல் என்று பொருள்.

செவ்வாய்க்கிழமைகளில் வைரவருக்கு மிளகும், உப்பும் வைத்து வணங்கலாம்.

திருவாவினன்குடியில் உள்ள முருகப் பெருமானை தரிசித்தால் கடன் சுமை நீங்கும்.

திருநெல்வெண்ணெயில் உள்ள சிவபெருமான் கோவிலுக்குச் சென்று வந்தாலும் கடன் சுமை தீரும்.