12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா...?

நம்முன்னோர்கள், என்ன தான் தவறு செய்தாலும், பாவம் செய்தாலும், பிறருக்கு தானம் செய்தால் நமக்கு நன்மை உண்டாகும் என்று கூறுவார்கள்.


தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று கூறுவார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் செய்ய வேண்டும் என்று அர்த்தம் ஆகும். அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்களையும் அவற்றின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் தவறமால் குலதெய்வ வழிபாட்டை கடைபிடிக்க வேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் உண்டாகும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த பொருளை தானம் செய்ய வேண்டும். இதனால் முன்னேற்றம் உண்டாகும். மேலும் செவ்வாய்கிழமைகளில் சாம்பார் சாதத்தை தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் வளம் பெருகும்.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்து வெண்பொங்கலை தானம் செய்ய வேண்டும். இவற்றால் எல்லாவித செல்வமும் உங்கள் வீடு தேடி வரும்.

கடகம் - கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவை தானமாக கொடுக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வ வளம் சேரும்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் தயிர் சாதத்தை ஏழை எளிய மக்களுக்கு அடிக்கடி தானம் செய்ய வேண்டும். இவற்றால் மனதிற்கு அமைதி கிடைக்கும். புண்ணியம் சேரும்.

கன்னி - கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை வழிபாடு செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் உணவை தானம் செய்ய வேண்டும். இது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

துலாம் - துலாம் ராசிக்காரர்கள் விநாயகரை வழிபாடு செய்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளை செய்ய வேண்டும். இதனால் உங்கள் வாரிசுக்கு நன்மை உண்டாகும்.

விருச்சகம் - விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கலை தானம் செய்வதால் பணவரவு அதிகரிக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் முருகனை வழிபாடு செய்ய வேண்டும். கொண்டை கடலை மாலையை குருபகவானுக்கு அணிவித்தப் பிறகு பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் செவ்வாய்கிழமைகளில் சாம்பார் சாதத்தை தானம் செய்தால் செல்வம் செழிக்கும்.

மகரம் - மகர ராசிக்காரர்கள் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் கோவில் சீரமைக்கும் பணிகள் நடக்கும் போது பொருட்களை தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்து ஏழை மக்களுக்கு கதம்ப உணவை தானம் செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு பண வரவு மேம்படும்.

மீனம் - மீன ராசிக்காரர்கள் பௌர்ணமி நாட்களில் சிவனை தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியே செய்தால் புண்ணியம் கிடைக்கும்.