வெள்ளிக்கிழமைன்னா இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க... குடும்பத்துக்கு ஆகாது!

வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்த நாளாகவும், ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.


வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும். பெண்கள் வீட்டை வைத்துக்கொள்வதை பொறுத்துதான் மகாலட்சுமி அருள் வீட்டிற்கு கிடைப்பதும், கிடைக்காததும் உள்ளது.

பெண்கள் காலை எழுந்தவுடன் அடுப்பு துடைக்கக்கூடாது.

வாசலில் புள்ளி வைத்த கோலம் போடக்கூடாது.

பிறகு அழுக்குத்துணிகளை சேர்த்து வைக்கக்கூடாது.

முக்கியமாக பெண்கள் ஒட்டரை அடிக்கக்கூடாது. ஏனெனில் கடன்களை அதிகரிக்கும்.

சமையலில் அன்று பருப்பு சேர்க்காமல் குழம்பு வைக்கக்கூடாது.

இவை எல்லாம் வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை.

வெள்ளிக்கிழமைக்கு முதல்நாளே அடுப்பை துடைத்து வைக்க வேண்டும். வாசலில் தாமரைக்கோலம் போட்டால் வீட்டுக்குள் மகாலட்சுமி வருவதாக ஐதீகம். பருப்பு சேர்த்துதான் அன்று குழம்பு வைக்கவேண்டும். அப்படி வைக்க பருப்பு இல்லையென்றால் ஒரு நான்கு, ஐந்து பருப்பாவது சாதம் வேகும்போது அதில் போட்டு வடிக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யக்கூடாது என்று பெண்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் போல ஆண்களும் சில செயல்களை வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன.

வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று முகசவரம் செய்யக்கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று தேவையில்லாத விரய செலவுகளை செய்யக்கூடாது.

இந்த மூன்றையும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யாமல் இருப்பது நல்லது. இதனால் நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.