இன்னமும் உலகம் கொரோனா பிரச்சனையில் இருந்தே மீள முடியலை அதுக்குள்ள அணில் காய்ச்சலா..?

சீனா உருவாக்கிய கொரோனா அச்சத்தில் இருந்து இன்னமும் உலகம் மீள முடியாமல் தவித்துவருகிறது. இந்த நிலையில், பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவுவதாக சொல்லப்பட்டது. இதையடுத்து சீனாவில், 'மார்மோட்' எனப்படும் அணில் வகையைச் சேர்ந்த பிராணியின் மாமிசத்தை சாப்பிட்ட சிலருக்கு, உண்ணி நோய் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இது குறித்து, சீன பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில், மார்மோட் எனப்படும் அணிலின் இறைச்சியை பச்சையாக சாப்பிட்டதால், மங்கோலியாவின் பயானுார் நகரில், கடந்தாண்டு இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆனால், அது தொடர்பாக, எந்த விசாரணையும் நடக்கவில்லை.

இந்நிலையில், அந்த நகரில், சமீபத்தில், 27 வயது இளைஞர் மற்றும் அவருடைய, 17 வயது சகோதரருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், மார்மோட் உட்பட சிறிய வகை பிராணிகளின் உடலில் தங்கியிருக்கும் உண்ணிகள், அந்த பிராணிகளின் இறைச்சியில் சேருவதால், இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

திடீரென கடும் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, நிணநீர் கட்டிகள் ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உருவாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது. தற்போது, அந்த இருவருடனும் பழகிய, 146 பேர் தனிமைபடுத்தப்பட்டு, பரிசோதனைகள் நடக்கின்றன.

இந்த உண்ணி நோய், பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இது, மிக மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளது. அதனால், இது போன்ற பிராணிகளின் இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விதவிதமாக சீனாக்காரர்கள் தின்பதற்கு உலகமே அனுபவிக்க வேண்டும் போலிருக்கிறதே.