அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும்.
இந்த நோயை வராமல் தடுக்கவே அரைஞாண் கயிறு கட்டுகிறோம்! உங்களுக்கு தெரியுமா?
ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.
ஓரிரு இந்திய ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, பொன்
கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக்கயிற்றை அணிவர். கயிறுகள்
கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான தமிழ் இந்துக்கள், கிறித்தவ
ஆண்கள், குழந்தைகள் இதை அணிந்திருப்பதைக் காணலாம். சிற்றூர்களில் உள்ள இசுலாமியர்களிடமும்
இதை அணியும் பழக்கம் உண்டு.
இந்த கயிற்றை ஏன் போட வேண்டும் என்று கேட்டால் அதற்கு பெரியவர்கள் சொல்லும்
பதில், இதை அணிந்து கொண்டால் திருஷ்டி படாது என்று கூறுவார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.
அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது. நம்மை விஷம் கொண்ட பூச்சிகள்
மற்றும் பாம்பு போன்றவை தீண்டி விட்டால் அந்த விஷம் நமது கடிவாய் மற்றும் இதயத்திற்கு
செல்லாமல் தடுப்பதற்கு, அரைஞாண் கயிறு பயன்படுகிறது.
எப்படியெனில் நமது கையினால், அரைஞாண் கயிற்றை அறுத்தெடுத்து அவசர உதவியாக இறுக்கிக்
கட்டும் ஒரு தற்பாதுகாப்புக்காக பயன்படுகிறது.ஆண்கள் தான் பெண்களை விட இந்த அரைஞாண்
கயிற்றை தங்களின் இடுப்பில் அதிகமாக கட்டுவார்கள். ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு
ஒரு நோய் தடுப்பு முறை ஆகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு.
அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு.
உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.