குவிந்த லைக்ஸ்..! அதிகரித்த ரிட்வீட்..! ரஜினி வீடியோவை ட்விட்டர் நீக்கியதன் உண்மை பின்னணி!

கரோனா விழிப்புணர்வு பற்றிய ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு ட்வீட் , ட்வீட்டர் விதிகளை மீறியதாக ட்விட்டரால் நீக்கப்பட்டிருக்கிறது. எந்த விதியை மீறிய பதிவு என்பதை ட்விட்டர் தான் கூற வேண்டும். அதற்குள் ரஜினிகாந்த் வதந்தியைப் பரப்பியதாக ஒரு கும்பல் தண்டோரா போட்டுக்கொண்டு திரிகிறது.


வதந்தி என இவர்கள் மேற்கோள் காட்டுவது “12 முதல் 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் நிலமை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துவிடும். அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தடுக்கலாம்” எனக் ரஜினி கூறியதைத் தான்.. அது மிகப்பெரிய தவறு என்கிறார்கள். இந்த வதந்தியால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை இதை வதந்தி எனக் கூறுவோர்தான் கூற வேண்டும். 

ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவின் நோக்கம், அரசின் முதல் கட்ட நடவடிக்கையான “Janatha curfew" விற்கு மக்கள் ஆதரவளித்து , அதனை 22ம் தேதி முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே. அந்தக் கருத்து அந்த வீடியோவில் மிகத் தெளிவாகவும், மக்களை எந்த வகையிலும் miss lead செய்யாத வகையிலும் இருந்தது என்பது அந்த வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் தெரியும். 

குறிப்பாக திமுக ஆதரவாளர்களும், ரஜினியை எதிர்ப்பவர்களும் அந்த ட்வீட் நீக்கப்பட்டதை ரஜினி தோற்றுவிட்டதைப் போலவும், அவர்கள் ஜெயித்து விட்டதைப் போலவும் கிட்டத்தட்ட பண்டிகைப் போல கொண்டாடுகின்றனர். CAA போராட்டத்தில் போலீஸ் அடித்ததில் ஒருவர் இறந்துவிட்டதாக, வேறு ஒரு இடத்தில் பலியான ஒருவரின் படத்தை தவறாக திமுக MP ஒருவர் பதிவிடுகிறார். சார்ந்தோர் கொதித்தெழுகிறார்கள். அரசாங்கத்தையும், காவல்துறையையும் சபிக்கிறார்கள். வெறியேறுகிறது. அதற்குப் பெயர்தான் miss leading. அன்று பொத்திக்கொண்டிருந்த அதே குழு இன்று ரஜினிகாந்த் miss lead செய்வதாக கதறுகிறது. 

அதே குழுவினரில் அடுத்த கோரிக்கை “ஒரு நாளெல்லாம் பத்தாது.. பதினாலு நாள் உடனடியா இந்தியாவை லாக் டவுன் செய்” என்பது தான். எது? 130 கோடி மக்களுள்ள இந்தியாவை உடனடியாக 14 நாட்கள் லாக் டவுன் செய்ய வேண்டும். இதே குழுவினர்தான் இரண்டு வருடங்கள் முன்பு “என்னங்க... demonetisation ன்னா நாலு நாளுக்கு முன்னாடி சொல்லிட்டு செய்றதில்லையா... இப்ப பாருங்க மக்கள் எவ்ளோ கஷ்டப்படுறாங்க” என்றவர்களும். 

உதாரணத்திற்கு அமெரிக்காவுலய்யெல்லாம் எப்டின்னா.... இங்கிலாந்துலயெல்லாம் எப்டின்னா... ஏன் கேரளவுல கூட எப்டின்னா என பல உதாரனங்கள். கலைஞர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததுமே, அடுத்தவனுக்கு எதேனும் பொருள் வேண்டுமே என்று கூட நினைக்காமல் , ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி பனிக்கரடி போல பதுங்கிய மக்கள் வாழும் ஊர் இது. 14 நாள் லாக் டவுன் என்ற அறிவிப்பு வரும்பொழுது நிலமை எப்படியிருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறதா?

இன்னும் கரோனாவின் தாக்கம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை. பலர் இன்னும் அதன் விளைவு எப்படியிருக்கும் என அறியாமலிருக்கிறார்கள். படித்த, தினமும் சமூக வலைத்தள செய்திகளை தொடரும் நண்பர்களே நாளை கிரிக்கெட் விளையாட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “தமிழனுக்கெல்லாம் கரோனா வராதுடா” “மதுரைக்காரய்ங்கல்லாம் தேக்குடா” என்று கூட பலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அரசு எடுத்திருப்பது தற்போது முதற்கட்ட நடவடிக்கை. அதை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனப்தை பொறுத்தே அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருக்கப் போகிறது. முதற்கட்ட நடவடிக்கையை முழுமையாக கடைபிடிப்பதன் மூலமாகவே இந்த கரோனாவின் தீவிரத்தை உணராதவர்களுக்கு உணர்த்த முடியும். 

ரஜினிகாந்த் போன்றோரால்தான் கரோனாவின் தீவிரத்தை வெகுஜன மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த சூழலில் ரஜினிகாந்த்தின் மூலம் இந்த செய்தி எத்தனை பேரை சென்றடைய முடியும், அதன் மூலம் எத்தனை பேருக்கு கரோவின் தீவிரத்தை உணர்த்த முடியும் என்றுதான் பார்க்கவேண்டும். ஆனால் ஒரு சாரர் மகிழ்கின்றனர். ”பாத்தீங்களா.. இப்டிதான் வேணும்” என்கின்றார். கடந்த சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்கள், செய்தி ஊடங்கங்களில் கரோனா விழிப்புணர்வு செய்திகளைக் காட்டிலும் இந்த விஷயமே அதிகம் பேசப்படுகிறது. 

ஜாதி மதம், விறுப்பு, வெறுப்பு, கட்சி கொள்கை கடந்து ஒன்றாகப் போராட வேண்டிய ஒரு சூழலில் நாம் இப்பொழுது இருக்கிறோம். இல்லை இங்கும் உங்கள் அரசியல் முகம் தான் எட்டிப்பார்க்குமென்றால், வெட்கப்பட வேண்டியது விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற ரஜினிகாந்தோ அல்லது அவரைத் தொடர்பவர்களோ அல்ல. நீங்கள்தான்!

மேலே கூறியதை முத்துசிவா எனும் அதிரடிக்காரன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதே போல் கிஷோர் கே சாமியும் ரஜினியின் வீடியோ நீக்கப்பட்டதன் பின்னணியில் திமுக ஐடி விங்க் இருப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இப்படி நாலாந்தர அரசியல் தமிழகத்திற்கு தேவை தானா?