அரசியல் ஆட்டம் அவருக்கு சரிபட்டு வராது..! ரஜினிக்கு எச்சரிக்கை செய்யும் சீமான்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் சீமான். தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.


இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது அதற்கு சீமான், ‘’ரஜினியைப் பற்றி ஏன் இங்கு பேசுகிறீர்கள். ரஜினிகாந்த் அமைதியாக இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன். தான் முதல்வர் வேட்பாளர் இல்லை, இன்னொருவரைத்தான் அந்த பதவிக்கு நியமிக்கப்போகிறேன் என்று அவர் எப்போது அறிவித்தாரோ, அன்றிலிருந்து அவருடனான முரண்பாடு தீர்ந்துவிட்டது. 

சினிமாவில் என்னைவிட ரஜினி, கமல் மூத்தவர்களாக இருந்தாலும், அரசியலில் அவர்களை விட நான் மூத்தவன். கடந்த 10 ஆண்டுகளில் என்னைவிட அதிகமான அவமானங்களை சந்தித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதையெல்லாம் ரஜினி தாங்கமாட்டார். ஏனெனில், அவர் புகழ்ச்சியை மட்டும் பார்த்தவர். யார் ரஜினியை அரசியலில் இறக்கிவிடுகிறார்களோ அவர்களே அவரைத் திட்டுவார்கள். அரசியல் ஆட்டம் அவருக்கு சரிபட்டு வராது” என்று கூறினார்.

அரசியல் சரிப்பட்டு வராது என்ற வகையில் சீமான் கூறியிருப்பதை ரஜினி எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறாரோ..?