சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் 100 சதவிகிதம் வாய்ப்பே கிடையாது... அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்.

கொரோனா தொற்று காரணமாக சிறையில் இருந்துவரும் சசிகலா எந்த நேரமும் தமிழகம் திரும்பிவரலாம், அப்போது அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று ஒரு வதந்தியை டிடிவி தினகரன் அணியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று சசிகலா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்துப் பேசினார். அதிமுகவை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது. அப்படிபட்ட எஃகு கோட்டை. சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவையும், அவரைச் சேர்ந்தவர்களையும் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.

சசிகலா இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அதனால், சசிகலாவை அதிமுகவில் 100 சதவீதம் இணைக்க வாய்ப்பில்லை. மனிதாபிமானம் அடிப்படையில் சசிகலா நலம் பெற ஓபிஎஸ் மகன் கருத்து தெரிவித்துள்ளார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து சரியான நேரத்தில் கட்சியின் தலைமை அறிவிக்கும். பாமகவுடனான கூட்டணியில் பிரச்சனை ஏதுமில்லை, எனக் கூறினார்.