மேனிக்கு அழகு தரும் திராட்சை.. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் செய்திகளையும் பாருங்க..

அனைத்து காலங்களிலும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது திராட்சை. கருப்பு, பச்சை என்று இரண்டு வகை திராட்சையிலும் நிறையவே சத்துக்கள் உள்ளன.


  • ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு. மேனிக்கு அழகும் பளபளப்பும் தரும்.
  • வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்தாக செயலாற்றுகிறது திராட்சை.
  • திராட்சை ரசம் பருகுவதன் மூலம் காய்ச்சல் குறையும். வறட்டு இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
  • திராட்சையில் இருக்கும் வேதிப்பொருட்களுக்கு புற்று நோயைத் தடுக்கும் தன்மை உண்டு. ரத்தசோகைக்கும் நிவாரணம் தருகிறது