திருமணத்திற்கு முன்பே என் மூலமாக 3 முறை கர்ப்பமானார்..! 3 முறையும் கருவை கலைத்தார்..! சசிகுமார் நாயகிக்கு வந்த சோதனை!

ஐதராபாத்: 3 முறை கருக்கலைப்பு செய்ததாக தகவல் பரப்பிய நபர் மீது நடிகை போலீசில் புகார் செய்துள்ளார்.


சசிக்குமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர், மாயவன் என்ற படத்தில் கூட நடித்திருந்தார். பிறகு, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தியவர், தற்போது அங்கு முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இந்நிலையில், மீண்டும் தமிழில் நல்ல கதைக்களத்துடன் கூடிய  புதிய படம் ஒன்றில் அதர்வா ஜோடியாக லாவண்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

இதற்கிடையே, லாவண்யா பற்றி நடிகர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். டோலிவுட்டை சேர்ந்த சுனிசித் என்ற அந்த நடிகர் , யூ டியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''லாவண்யா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது. குறிப்பாக, லாவண்யா என்னை வெளியில் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

என்னுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த அவர் 3 முறை கர்ப்பம் தரித்தார். பிறகு அது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, 3 முறை கருக்கலைப்பும் செய்துவிட்டார். பிறகு, என்னை விட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார்,'' என்று குறிப்பிட்டிருந்தார். சுனிசிதியின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தன்னை பற்றி வீண் வதந்தி பரப்புவதாகக் கூறி லாவண்யா போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுபற்றி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.