சாலையில் துடிதுடித்த சுபஸ்ரீ! தாமதமான ஆம்புலன்ஸ்! இளைஞர்கள் சேர்ந்து செய்த நெகிழ்ச்சி செயல்! வைரவில் சிசிடிவி!

விபத்தில் சிக்கி உயிருக்கு துடித்துக் கொண்டிருந்த சுபஸ்ரீயை இளைஞர்கள் சிலர் காப்பாற்றி லோடு ஆட்டோவில் ஏற்ற முயன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.


பேனரில் மோதி கீழே விழுந்தத உடன் பின்னால் வந்த லாரி சுபஸ்ரீயின் மேல் ஏறி இறங்கியது. இதனால் அவர் உயிருக்கு போராடியுள்ளார். ரத்தம் அதிக அளவில் வெளியேறிய நிலையில் அவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா என்று சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அவர் கண்களில் அசைவு இருந்தள்ளது.

இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார்கள். ஆனால் 20 நிமிடங்களாக ஆம்புலன்ஸ் வராத நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இதனை அடுத்து அவரை தூக்கிய நிலையில் வாகனங்கள் எதுவும் முன்வரவில்லை.

ஆனால் அந்த வழியாக சென்ற லோடு ஆட்டோ ஒன்று சுபஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக் கொண்டது. இதனை அடுத்து உடனடியாக இளைஞர்கள் சேர்ந்து சுபஸ்ரீயை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.