60 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த பா.ஜ.க.வுக்கு 20 சீட்டுகள் மட்டுமே கொடுத்து அசத்திய எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டே இருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா
யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இரு தரப்பு தலைவர்களும் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் உடன்படிக்கையில் கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து நள்ளிரவில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பி.ஜே.பி. நிற்கும் 20 தொகுதிகளுக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
(1)மயிலாப்பூர் கே.டி. ராகவன்
(2)காரைக்குடி ஹெச். ராஜா
(3)சேப்பாக்கம் குஷ்பு
(4)வேளச்சேரி டால்பின் ஸ்ரீதர்
(5) காஞ்சிபுரம் கேசவன்
(6)திருத்தணி சக்கரவர்த்தி
(7)பழனி கார்வேந்தன்
(8)சிதம்பரம் ஏழுமலை
(9)கிணத்துக்கடவு அண்ணாமலை
(10)கோவை தெற்கு வானதி சீனிவாசன்
(11)நாமக்கல் ராசிபுரம் எல்.முருகன்
(12)ஆத்தூர் வி.பி.துரைசாமி
(13)திருவாரூர் கருப்பு முருகானந்தம்
(14)திருவண்ணாமலை தணிகைவேல்
(15)வேலுர் கார்த்தியாயினி
(16)ஒசூர் நரேந்திரன்
(17)தூத்துக்குடி சிவ முருக ஆதித்தன்
(18)நெல்லை நயினார் நாகேந்திரன்
(19) ராஜபாளையம் நடிகை கவுதமி
(20)துறைமுகம் வினோஜ் பி.செல்வம்